தினமும் கண்ணை மூடி ‘ஓம்’ மந்திரம் உச்சரித்தால் எவ்வளவு நன்மை கிடைக்குன்னு தெரியுமா?
aanmigam-samugam-life-style
By Nandhini
புனிதமான ஓம் மந்திரம் சொல்வதன் மூலம் உங்களின் உடல், மனம், மெய்யியல் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமாம். ஓம் மந்திரம் மறைவான ஆற்றலை நமக்கு அளிக்க வல்லது.
சரியான முறையில் ஓம் மந்திரத்தை உச்சரித்து வந்தால் உங்கள் உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும். ஓம் ஒலியின் அதிர்வு உடலையும் மனதையும் வலிமையாக்க மாற்றிவிடும்.
‘ஓம்’ மந்திரம் உச்சரிக்கும்போது, நமக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி பார்ப்போம் -
- தினமும் அதிகாலையில் ‘ஓம்’ மந்திரம் சொன்னால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். இதனால் உடல் புத்தம் புதியதாக, புத்துணர்வு பெறும்.
- ‘ஓம்’ மந்திரம் உச்சரிக்கும்போது, ஆக்கப்பூர்வ அதிர்வுகள் ஏற்படும். இது நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை விஷயங்கள் மறைய வைக்கும்.
- ‘ஓம்’ மந்திரம் உச்சரிக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள ‘ஆரா’ எனும் ஒளி வட்டம் தூய்மையாக்கும்.
- ‘ஓம்’ மந்திரத்தை உச்சரிக்கும்போது, நம்மை ஆழ்நிலை தியான நிலைக்கு கொண்டு செல்லும். ஆழ்நிலை தியான நிலைக்கு செல்வதன் மூலம் கவனச் சிதறல் மறையும். நம்முடைய இலக்கை அடையவும், கவனம் அதிகரிக்கவும் தூண்டுதலாக அமையும்.
- ‘ஓம்’ மந்திரம் உச்சரிக்கும்போது, தெளிவின்மை மறைந்து நமக்கு தெளிவு கொடுக்கும்.
- ‘ஓம்’ மந்திரத்தை பலர் சேர்ந்து குழுவாக சொல்லும்போது, சக்தி அவ்விடத்தில் நிறைந்து உருவாகும். ‘ஓம்’ மந்திரம் உச்சரிக்கும்போது, செரிமான மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்கும். செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறத் தூண்டும்.
- ‘ஓம்’ மந்திரம் உச்சரிக்கும்போது, உணவில் கவனம் அதிகரிக்கும். செரிமானம் தூண்டல் உள்ளிட்ட காரணிகளால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது.
- ‘ஓம்’ மந்திரம் உச்சரிக்கும்போது, உடலில் உள்ள நச்சுக்கள் நீங்குவதால் சருமம் பொலிவு அடையும்.
- ‘ஓம்’ மந்திரம் தண்டு வடம் நிமிர்ந்து உறுதித் தன்மை பெறும். ‘ஓம்’ மந்திரம் உச்சரிப்பினைக் கேட்டால் கூட அட்ரினல், கார்டிசோல் போன்ற மன அழுத்தம், பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களின் அளவு குறையும். ‘
- ஓம்’ மந்திரம் உச்சரிக்கும்போது, இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இதனால், இதய துடிப்பு சீராகிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கிறது.