இன்றைய ராசி பலன்கள் (27.07.2021)

aanmigam
By Nandhini Jul 27, 2021 08:39 AM GMT
Report

இன்றைய ராசி பலன்கள் (27.07.2021) | Aanmigam Samugam

மேஷம்

சிறப்பான, சாதகமான நாளாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி இலக்கை அடைவீர்கள். வேலை, தொழிலில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

சீரான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை, தொழில் சூழல் திருப்திகரமான காணப்படும். வேலையை சுறுசுறுப்பாக குறித்த நேரத்துக்கு முன்னதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்

தாமதங்கள் காணப்படும் நாளாக இருக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம். இலக்குகளை அடைவதில் அவசரம் காட்ட வேண்டாம். வேலை சூழல் சற்று கடினமாக இருக்கும். வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை. வீணாக வார்த்தைகளை விடுவதால் கணவன் மனைவி மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திச் செயல்படுவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணத் தேவை அதிகரிக்கும்.

சிம்மம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.

துலாம்

சாதகமான நாளாக இருக்காது. சவாலான சூழல்கள் ஏற்படும். நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். உயர் அதிகாரி, உடன் பணிபுரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

கடினமான, சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக மனதில் கவலை, பதற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.

தனுசு

நன்மையான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள்.கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மகரம்

மனக் கவலை, குழப்பம் கொண்ட நாளாக இருக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். விரும்பிய பலன்கள் கிடைக்காமல் போகலாம். நிதானத்துடனும் கவனத்துடன் வேலையை செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும்.

மீனம்

ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். நிதானத்துடன் அனுசரித்து செல்வது இன்றைய நாள் நல்ல விதத்தில் கழிய உதவியாக இருக்கும். வேலையில் தடைகள் இருக்கும். பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும்.