நவக்கிரகங்கள் இல்லாத 11 சிவாலயங்கள் : யாரும் அறியாத தகவல்!
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்பட்டு வணங்கப்படுகிறார்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கிய சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் காட்சி தருகிறார்.
தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னதி இருக்கும். சில சிவாலயங்களில் நவக்கிரகங்கள் இல்லை. இதற்கு முக்கிய காரணம், எங்கெல்லாம் சிவனை எமன் வழிபட்டுள்ளாரோ அங்குள்ள சிவன் ஆலயங்களில் நவக்கிரக சன்னதி இருக்காதாம்.
அப்படி நவக்கிரகங்கள் இல்லாத 11 சிவாலயங்களை நாம் இப்போது பார்ப்போம் -
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் கிடையாது.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி கிடையாது.
ஸ்ரீவாஞ்சியம் , திருவாவடுதுறை, திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்சீலி, திருக்கடையூர் , காளஹஸ்தி , திருவையாறுக்கு அருகில் உள்ள திருமழபாடி, திருவெண்காடு, திருப்புரம்பியம் உள்ளிட்ட இடங்களில் சிவபெருமானை எமன் வழிபட்டுள்ளதால் இங்கெல்லாம் நவக்கிரகங்கள் இல்லை.
புராண கதை -
திருக்கடையூரில் எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்துள்ளார். என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எமனை எட்டி உதைத்ததாக ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இங்கு இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும்,
இதைத்தொடர்ந்து எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக புராணத்தில் சொல்லப்படுகிறது.
திருப்பைஞ்சீலி சிவன் ஸ்தலத்தில் எமனுக்கு என்றே தனிச்சன்னதி உள்ளது.