75 வயதில் பத்து வருட சிறை தண்டனை? என்ன ஆகப்போகிறார் ஆங்சான் சூகி!

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கைது செய்தது. 

இதனை எதிர்த்து மியான்மரில் தொடர்ந்து மகக்ள் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களை இராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. 800-க்கும் மேற்பட்ட மக்கள் இராணுவத்தின் அடக்குமுறையால் கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக முன்னணி மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே இராணுவம் இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டது.

தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி வருகிற இராணுவம் தற்போது ஆங் சாங் சூகி மீது பல்வேறு வழக்குகளையும் தொடர்ந்துள்ளது.

ஆங் சாங் சூகியின் மீது இராணுவ ரகசியங்களை காக்கத் தவறியது ஊழலில் ஈடுபட்டது எனப் பல வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 

இன்று விசாரணை தொடங்கியுள்ளது. ஜூலை மாதத்திற்குள் விசாரணை முடியும் என்று கூறப்படுகிறது. ஆங் சாங் சூகி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்