60 வயதில் புதிய காதலியை அறிமுகப்படுத்திய நடிகர் ஆமிர் கான்
நடிகர் ஆமீர் கான் தனது புதிய காதலி கௌரி ஸ்ப்ராட்டை அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஆமீர் கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆமீர் கான் தற்போது தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கௌரி ஸ்ப்ராட் உடன் ஓராண்டாக வாழ்ந்து வருவதாக கூறியு்ளளார். இவர் சமீப காலமாக சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருக்கின்றார். காரணம் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்பாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆமிர் கான் முதன்முறையாக 1986 முதல் 2002 வரை தயாரிப்பாளர் ரீனா டட்டுடன் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பின்பு கிரன் ராவை 2005ம் ஆண்டு ஆமிர்கான் திருமணம் செய்ததுடன், இவரை 2021ம் ஆண்டு பிரியவும் செய்தார். ஆனாலும் இருவரும் அவர்களது குழந்தை ஆசாத்துக்காக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
60 வயதில் புதிய காதலி
ஆமிர்கான் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அப்பொழு தான் தனது காதலியை அறிமுகம் செய்துள்ளார்.
அதாவது இனிமேல் மறைக்கவும் தேவையில்லை என்று கூறியதுடன், கௌரி ஸ்ப்ராட் உடன் ஒன்றரை ஆண்டாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த கௌரியை 25 ஆண்டுகளாக தனக்கு தெரியும் என்றும், மும்பையில் எதார்த்தமாக சந்தித்த நிலையில், தற்போது தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.
ரீனா மற்றும் கிரனுடன் 16 ஆண்டுகள் வாழ்ந்துள்ளதாகவும், பல வழிகளில் தற்போதும் ஒன்றாகத்தான் இருப்பதாக கூறியதுடன், 60 வயதில் திருமணம் செய்வது தனக்கு பொருந்துமா என்று தெரியவில்லை என்றாலும், தனது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், முன்னாள் மனைவிகளுடன் நல்லதொரு பந்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |