பிரபல நடிகருக்கு கொரோனா: அச்சத்தில் பாலிவுட்
covid
actor
bollywood
Aamir Khan
By Jon
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அமீர்கான்,தன்னிடம் பணிபுரிந்தவர்களையும் கொரோனா சோதனை செய்து கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

அமீர்கான் தற்போது லால் சிங் ச்சதா படத்தில் நடித்து வரும் நிலையில் அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதிகரிக்கும் பதற்றம்: விமான சேவைகள் முடக்கம் - நகரும் அமெரிக்காவின் USS Abraham Lincol போர்க்கப்பல் IBC Tamil