டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி - மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்

Aam Aadmi Party Indian National Congress BJP Delhi
By Thahir Dec 07, 2022 09:21 AM GMT
Report

டெல்லி மாநகராட்சி தேர்தலில் 126 இடங்களை கைப்பற்றி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி 

நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், மாநகராட்சியை கைப்பற்ற பெரும்பான்மை இடங்களாக 126 உள்ள நிலையில் ஆம் ஆத்மி 131 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. 

Aam Aadmi took over the Delhi Corporation

15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி டெல்லியில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

தேர்தல் முடிவுகளில் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் 

ஆம் ஆத்மி - 131

பாஜக - 99

காங்கிரஸ் - 7

மற்றவை - 3