தமிழகத்தில் ஆம் ஆத்மி - மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை?
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக - காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும், அதிமுக - பாஜக ஒரு கூட்டணியிலும் இடம்பெற்று வருகின்றன. இவை தவிர நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தனித்து தேர்தலைச் சந்திக்கின்றன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணையலாம் எனப் பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஆனால் அதற்குப் பிறகு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யமும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி வைக்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது.
கமல்ஹாசன் கட்சி தொடங்குவதாக அறிவித்த மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.