அடடா..அடடா என்ன ஒரு அறிவிப்பு 300 யூனிட் மின்சாரம் இலவசம்: மாஸ் காட்டும் ஆம் ஆத்மி

Announcement Electricity Free Aam Aadmi Party
By Thahir Sep 17, 2021 02:20 AM GMT
Report

உத்தரப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைந்தால் ஒரு குடும்பத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதியளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டமன்ற தேர்தலில், அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிடுகிறது.

அடடா..அடடா என்ன ஒரு அறிவிப்பு 300 யூனிட் மின்சாரம் இலவசம்: மாஸ் காட்டும் ஆம் ஆத்மி | Aam Aadmi Party Electricity Free Announcement

மேற்கு உ.பி.யில் அக்கட்சிக்கு வாக்கு வங்கியுள்ளது. இந்தநிலையில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அடடா..அடடா என்ன ஒரு அறிவிப்பு 300 யூனிட் மின்சாரம் இலவசம்: மாஸ் காட்டும் ஆம் ஆத்மி | Aam Aadmi Party Electricity Free Announcement

அப்போது அவர் பேசியதாவது, உத்தரப் பிரதேசத்தில் இருண்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

பொது மக்களின் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணங்களை தள்ளுபடி செய்யப்படும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

ஒரு குடும்பத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தலைநகர் டெல்லியை போலவே அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மின்சாரக் கட்டணங்கள் சீர் செய்யப்படும்.

எனவே உத்தரப் பிரதேச மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டும், என அவர் கூறினார்.