தேர்தலில் ஜெயித்தால் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், 24 மணிநேர மின் விநியோகம்..!
உத்தராகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதில் வெற்றி பெற்றால் மாநிலத்தில் நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். மக்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 24 மணி நேர மின்சாரம் என வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
ஏற்கனவே பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.