தண்ணீருக்காக உண்ணாவிரதம் - ஆபத்தான நிலையில் டெல்லி அமைச்சர் அதிஷி

Aam Aadmi Party Delhi Haryana
By Karthikraja Jun 25, 2024 06:23 AM GMT
Report

டெல்லிக்கு தண்ணீர் வழங்க கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .

டெல்லி

டெல்லியில் இந்தாண்டு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதற்கு காரணம் டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் தினசரி 100 மில்லியன் கேலன் ஹரியானா அரசு குறைத்துத் தருவதாஎன ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

AamAadmi atishi hunger strike

இந்நிலையில் ஹரியானா அரசின் இந்த செயலை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி நீர்வளத்துறை அமைச்சருமான அதிஷி கடந்த ஜூன் 21 ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

அதிஷி

அதிஷியின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று(25.06.2024) 4 வது நாளை எட்டிய நிலையில் , அவரது உடல்நிலை மிக மோசமடைய தொடங்கியுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அதிஷி அனுமதிக்க பட்டுள்ளார். 

AamAadmi atishi hunger strike

அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு வெகுவாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. நள்ளிரவில் 43 ஆக இருந்த சர்க்கரை அளவு அதிகாலை 36 ஆக குறைந்துள்ளது. நடக்க கூட முடியாத நிலையில் இருந்த அவர் ஸ்ட்ரெச்சர் மூலமாகவே அழைத்துச் செல்லப்பட்டார்.  

டெல்லி அரசாங்கம், ஹரியானா உடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 613 மில்லியன் கேலன் தண்ணீரை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் 513 மில்லியன் கேலன் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. வெப்ப அலைகளால் டெல்லியின் நீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.