இங்கிலாந்து கடித்துத் துப்பியதா, நியூசிலாந்து மென்று துப்பியதா?- ஆகாஷ் சோப்ரா அந்தர் பல்டி
உள்ளபடியே கூறுகிறேன் நியூசிலாந்து அணி கன் டீமெல்லாம் இல்லை, இங்கிலாந்து அரையிறுதியில் நியூசிலாந்தை கடித்துத் துப்பி விடும் என்று பேசிய ஆகாஷ் சோப்ரா மன்னிப்புக் கேட்கும் தொனியில் நியூசிலாந்தின் டி20 உலகக்கோப்பை அரையிறுதி வெற்றியை பெரிதும் விதந்தோதி தன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்
.இது தொடர்பாக நவம்பர் 8ம் தேதி ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் கூறும்போது, "நியூசிலாந்து அணி என்பது 5 விரல்கள் சேர்ந்த முஷ்டி அவ்வளவுதான்,
இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை நன்றாக மென்று, கடித்துத் துப்பி விடும். என்றார். ஆனால் நேற்று நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது,
இந்த நிலையில் அன்று நியூசிலாந்தை குறைத்து மதிப்பிட்ட ஆகாஷ் சோப்ரா, நேற்று நியூசிலாந்தின் வெற்றியைக் கண்டு உண்மையில் பிரமித்திருப்பார், ஆனால் பிரமிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் அந்த அணியை பாராட்டும் போது, நியூசிலாந்து அணி வார்த்தைகளில் பேசாது, செயல்தான் அதன் வார்த்தை என்று பாராட்டியுள்ளார்.
.ஒரே ஆண்டில் 2 ஐசிசி கோப்பைகள் என்று நியூசிலாந்து அணி சாதிக்க வாய்ப்பு. பெரிய மரியாதை" என்று ஆகாஷ் சோப்ரா அப்படியே அந்தர்பல்டி அடித்து புகழ்ந்துள்ளார்.