ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவரா? - ரசிகர்களின் எதிர்பார்ப்பை தீர்க்குமா அணி நிர்வாகம்
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
கிரிக்கெட் உடகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவில் இருக்கும் வீரர்கள் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்.
இதனிடையே இந்த ஐபிஎல் தொடர் 10 அணிகளை கொண்டு நடக்கவுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது,
ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்கள் குறித்தும், அணியின் கேப்டன் யார் என்பது குறித்தும் தெரிவித்துள்ள நிலையில் ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எந்த வீரரை கேப்டனாக்கும் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.
மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக யார் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்த தகவலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தனது யூடியூப் சேனலில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில் பெங்களூர் அணி விராட் கோலி,மேக்ஸ்வெல் மற்றும் சிராஜ் போன்ற வீரர்களை தக்க வைத்துள்ளது. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்க மாட்டேன் என்று முடிவெடுத்து விட்டார், இதனால் இதில் மீதமுள்ள இரண்டு விரர்களில் யார் கேப்டனாக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக்க அணி நிர்வாகம் யோசனை செய்து வருகிறது. என்னை பொறுத்த வரையில் ஜேசன் ஹோல்டர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார் எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.