மும்பை இந்தியன்ஸ் மோசமாக தோற்க இதுதான் காரணமா? - வெளியான அதிர்ச்சி தகவல்

mumbaiindians IPL2022 aakashchopra TATAIPL
By Petchi Avudaiappan Apr 04, 2022 03:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக தோற்க என்ன காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள், இந்நாள் சாம்பியன்களான மும்பை, சென்னை அணிகள்  விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியை தழுவியது. 

மும்பை இந்தியன்ஸ் மோசமாக தோற்க இதுதான் காரணமா? - வெளியான அதிர்ச்சி தகவல் | Aakash Chopra Points Out That Mi Bowling

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில்  முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா  மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக தோற்க என்ன காரணம் என்பது குறித்து  கருத்து தெரிவித்துள்ளார். 

அதில் அந்த அணி பந்து வீச்சில் பலவீனமாக உள்ளது என்றும்,  பும்ராவை தவிர்த்து மற்ற அனைவரும் மிக மோசமாக பந்து வீசுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் முருகன் அஸ்வின், பும்ரா, டைமல் மில்ஸ், டேனியல் சாம்ஸ்  ஆகியோரை தவிர்த்து மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

எனவே வரும் போட்டிகளில் மும்பை அணி தனது பந்துவீச்சு யுக்தியை மாற்றிக்கொள்ளவில்லை எனில் கோப்பை பற்றி கனவு காண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டியது தான் எனவும்  ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.