விராட் கோலிக்கு இடம் இல்லை - 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு
2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான சிறந்த வீரர்கள் பட்டியலை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருப்பதாலும், 2021 ஆம் ஆண்டு இந்த மாதத்தோடு நிறைவு பெறுவதாலும் ஆகாஷ் சோப்ரா 2021 ஆம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் தொடரின் வீரர்களை தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இலங்கையின் திமுத் கருணாரத்னவையும், மிடில் ஆர்டரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் , பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் பவாத் ஆலம் ஆகியோரையும், விக்கெட் கீப்பராக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.
மேலும் தனது அணியின் ஆல்ரவுண்டர்களாக நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கையில் ஜேமிசன் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளார். பந்துவீச்சாளர்களாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல், இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் இறுதியாக பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சகீன் அஃப்ரிடி ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் விராட் கோலி இடம் பெறாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.