சிஎஸ்கே பிளே-ஆப் போறதுக்கு ஒரே வழிதான் இருக்கிறது - முன்னாள் இந்திய வீரர் கருத்து

Chennai Super Kings IPL 2023
By Sumathi Mar 29, 2023 07:52 AM GMT
Report

சிஎஸ்கே பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல ஒரே வழிதான் இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி 13 சீசன்களில் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு சென்றிருக்கிறது. 9 முறை இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது. அதில் நான்கு முறை கோப்பைகளையும் வென்றுள்ளது.

சிஎஸ்கே பிளே-ஆப் போறதுக்கு ஒரே வழிதான் இருக்கிறது - முன்னாள் இந்திய வீரர் கருத்து | Aakash Chopra On Csks Prospects In Ipl 2023

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, “சிஎஸ்கே வீரர்களின் பட்டியலை பார்க்கையில் சிறப்பாக இருக்கிறது. தோனி கேப்டனாக இருக்கிறார். அதுவும் உணர்வுபூர்வமாக ஒன்றியுள்ளது. மேலும் தோனிக்கு கடைசி வருடம் என்றும் கூறப்படுகிறது.

இதுதான் பலமே 

மேலும் போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை மைதானம் சிஎஸ்கே அணியின் கோட்டை. அங்கு அவர்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறலாம். சிஎஸ்கே அணியின் பலமே அவர்களது ஆல்ரவுண்டர்கள் தான்.

சிஎஸ்கே பிளே-ஆப் போறதுக்கு ஒரே வழிதான் இருக்கிறது - முன்னாள் இந்திய வீரர் கருத்து | Aakash Chopra On Csks Prospects In Ipl 2023

சிவம் டுபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், டிவைன் பிரிட்டோரியஸ், மிட்ச்சல் சான்ட்னர் உட்பட இன்னும் சில இளம் ஆல்ரவுன்ட் வீரர்களும் இருக்கின்றனர். மற்ற அணிகளில் இல்லாத அளவிற்கு ஆல்ரவுண்டர்களை நல்ல முறையில் வைத்திருக்கின்றனர்.

இவர்களை முறையாக பயன்படுத்தினால் சிஎஸ்கே அணியை எவராலும் நெருங்க இயலாது.” எனத் தெரிவித்துள்ளார்.