ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகள் இவை தான் - பிரபல வீரர் கணிப்பு
ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகள் இவை தான் - பிரபல வீரர் கணிப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகள் குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சென்னை, டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ள நிலையில் மீதமுள்ள 2 இடங்களை பிடிக்க பெங்களூர்,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா இம்முறை மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது என கணித்துள்ளார். மேலும் 3வது இடத்தை பெங்களூருவும், 4வது இடத்தை கொல்கத்தாவும் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என தான் நினைப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.