பும்ரா விளையாடவில்லையென்றால் உலகமே அழிந்து விடாது... - ஆகாஷ் சோப்ரா கருத்து..!
பும்ரா விளையாடவில்லையென்றால் உலகமே அழிந்து விடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
பும்ரா விலகல்
காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகினார். இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது இந்திய கிரிக்கெட் அணியின் பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வந்தது.
களமிறங்க உள்ளார் ஜஸ்ப்ரித் பும்ரா
இந்நிலையில், நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள ஜஸ்ப்ரித் பும்ரா, ஐ.பி.எல். தொடரில் நேரடியாக களமிறங்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா ஐபிஎல் தொடரில் நேரடியாக களமிறங்க உள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்நிலையில் பும்ரா ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நீங்கள் முதலில் இந்திய வீரர். பிறகுதான் உங்கள் பிரான்சைஸிற்கு (franchise) விளையாடுங்கள். பும்ரா விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்து விடாது. அதே நேரத்தில், நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அது உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.