பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் வேண்டாம் - இந்திய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

INDvPAK aakashchopra bhuvneshwarkumar
By Petchi Avudaiappan Oct 19, 2021 09:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுரை வழங்கியுள்ளார். 

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நடைபெற உள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் வேண்டாம் - இந்திய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் | Aakash Chopra Has Doubts Bhuvneshwar Kumars Form

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு ஏமாற்றத்தையே கொடுத்தது. அவரால் விக்கெட் எடுக்கவும் முடியவில்லை, ரன்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூருக்கு இந்திய அணி இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.