ஜடேஜாவுக்கு பிசிசிஐ செய்த துரோகம் - உண்மையை போட்டுடைத்த முன்னாள் வீரர்

BCCI Ravindrajadeja aakashchopra
By Petchi Avudaiappan Mar 12, 2022 06:15 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணி வீரர் ஜடேஜாவுக்கு பிசிசிஐ துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

சர்வதேச அளவில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம், அவர்கள் ஊதியத்தின் அடிப்படையில் கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது.

ஜடேஜாவுக்கு பிசிசிஐ செய்த துரோகம் - உண்மையை போட்டுடைத்த முன்னாள் வீரர் | Aakash Chopra Dissapointed With Jadeja S Catagory

அந்த வகையில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ+ பிரிவில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. கடந்தாண்டும் இவர்கள் மூன்று பேர் தான் இந்த பிரிவில் இடம்பெற்றிருந்தனர். 

ஆனால் இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்த ஜடேஜா ஏன் ஏ+ பிரிவில் சேர்க்கப்படவில்லை என  முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வியெழுப்பியுள்ளார். அந்த பிரிவில் இடம்பெற மிகவும் தகுதியானவர் ஜடேஜா. தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இது ஜடேஜாவுக்கு  பிசிசிஐ செய்யும் துரோகம் என ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.