ஐபிஎல் ஏலத்தில் கோடிக்கணக்கில் விலைப்போகும் இந்திய வீரர் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் ஏலத்தில் இந்திய இளம் வீரர் ஒருவர் கோடிக்கணக்கில் ஏலம் போவார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதோடு வீரர்களுக்கான மெகா ஏலமும் நடக்கவுள்ளது. இதனால் இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 1,214 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
இதனால் எந்த அணி எந்தெந்த வீரரை எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் குறிவைக்கப்போகும் வீரர் ஒருவரைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பவுலர்கள் நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக மற்ற இந்திய பவுலர்களைவிட பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் தீபக் சாஹருக்கு மிகப்பெரிய தொகை காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.