டி20 உலகக்கோப்பைக்கு விராட் கோலி வேண்டாம் - பிரபல முன்னாள் வீரர் அறிவுரை
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மாவை களமிறக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே டி20 உலகக்கோப்பை கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கியுள்ளது. தற்போது பயிற்சிப்போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை குறித்து பேசினால் யார் தொடக்க வீரர்களாக களமிறங்க போகிறார்கள் என்ற கேள்வி தான் எழும். என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கிய போது கே.எல் ராகுலால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. தற்போது அவர் சிறப்பான பார்மில் உள்ளார். எனவே ராகுலை பயன்படுத்தி கொள்வதே இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சூர்யகுமார் யாதவை இந்திய அணி எப்படி பயன்படுத்தப்போகிறது என்பதை பார்க்க நானும் ஆவலுடன் காத்திருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதனிடையே நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரோகித் சர்மா ஆடும் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக கே.எல்.ராகுலுடன் இஷான் கிஷன் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.