களைகட்டிய ஆடி பெருக்கு - காலை முதலே நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்.
ஆடி மாதம் 18-ஆம் தேதி ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று நீர்நிலைகளில் வழிபாடு நடத்த ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சுப காரியங்களில் ஈடுபடுவார்கள்
சிறப்பான தமிழ் மாதமான ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில்,
புதிய தொழில் துவங்குவதோ, அல்லது சுபகாரியம் ஒன்றினை துவங்குவதோ போன்ற வேலைகளை செய்தால் அது மென்மேலும் பெருகும் என்ற காரணத்தினால், பலரும் இன்று புதிய முயற்சிகளில் இறங்குவார்கள்.
குறிப்பாக நிலம் வாங்குவது, தொழில் துவங்குவது, திருமண பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு
விதை, விதைத்து நாற்று நட்டுப் பயிர் வளர்க்கும் நாள்களின் அடிப்படையில் அமைந்த விழா ஆடிப்பெருக்கு. இந்த சிறப்பான நாளை காவிரி கரையோர பகுதிகளான ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், கொள்ளிடம் போன்ற மக்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
ஆடிப்பெருக்கு வழிபாடிற்காக ஆறுகள், நீர்நிலை பகுதிகளில் இன்று காலை முதலே பொதுமக்கள் கூடி படையலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
பெண்கள் ஒன்று கூடி ஆற்றங்கரையில் வாழை இலையில் அரிசி, பழங்கள், பனைஓலை மஞ்சள் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜை நடத்தி, பின்னர் மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.
ஆடிப்பெருக்கு களைகட்டியிருக்கும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடஙக்ளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.