ஆடியில வீசும் காத்து - இவளோ பிரச்சனைய தருமா? - விவரம் சொல்லும் திண்டுக்கல் சித்த மருத்துவர்
ஆடி மாதத்தில் வீசும் காற்றினால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சித்த மருத்துவர் சில தகவல்க்ளை தெரிவித்திருக்கிறார்.
ஆடி மாத காற்று
சாதரணமாக ஆடி மாதத்தில் காற்று சற்று வேகமாக வீச கூடும். கோடை வெயில் காலம் முடிந்த ஆடி மாதத்தில் காற்று அதிகமாக வீசுவதால், அனல் காற்று தான் பெரும்பாலும் வீசும். குறிப்பாக நகர் புறங்களில் இந்த காற்றின் தன்மை மிகவும் அனலாக இருக்கும்.
தூசுக்கள் பல வேறாக காற்றில் இந்த ஆடி மாதத்தில் கலந்து விடுகின்றன. தாவரங்களின் மகரந்தங்கள், நம் உடலில் இறந்து போன திசுக்களும் கூட சமயங்களில் இந்த காற்றில் தூசுகளாக கலந்து பரவுகின்றன. இந்த தூசுக்கள் நமது உடலில் படும் போது, அது பல்வேறான தீங்கினை நமக்கு அளிக்கும்.
அறிவுரை கூறும் சித்த மருத்துவர்
அதிலிருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி என்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சித்த மருத்துவர் சல்மா ஹைரானா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆடி மாதத்தில் தூசி சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகமாக வர கூடும்.
காற்று அதிகமாக வீசுவதால் உடலில் வாதம் சீர்குலைந்து காணப்படும். இதனால் கை கால் குடைச்சல், கண் நோய், சளி தும்மல் இருமல், சூலை நோய், உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அவரை, அத்தி, முருங்கை உள்ளிட்ட பிஞ்சு வகைகளை எடுத்துக் கொண்டால் விரைவில் இந்த வாதங்களை சரியாக உதவும். இவற்றுடன் மஞ்சள்,மிளகு, சீரகம் பூண்டு போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வது நல்லது என்றும் அவர் அறிவுறுத்திகிறார்.
தூசியினால் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய, நொச்சி இலைகளைக் கொண்டு ஆவி பிடிப்பதும் அவ்வாறான வாதங்களை சரி செய்ய உதவும் என்றும் சல்மா ஹைரானா தெரிவித்திருக்கிறார்.