ஆதி-நிக்கி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ் பிரபலங்கள் - புகைப்படங்கள் வைரல்!
டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதேபோல் மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து யாகாவராயினும் நாகாக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர்.ஒன்றாக படங்களில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக ஆதி - நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24-ம் தேதி சென்னையில் ஒரு ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.
இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இவர்களது திருமணம் மே-18ம் தேதி சென்னையில் எளிமையாக நடைப்பெற்றது.
திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்த திருமணத்தில் விக்னேஷ் சிவன், தெலுங்கு நடிகர்கள் நானி , சுதீப் கிஷன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
திருமண புகைப்படங்களை ஆதி-நிக்கி இருவரும் தங்களின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அவர்களின் ரிசப்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவர்களின் வரவேற்பு விழாவில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் தங்களின் குடும்பத்தோடு கலந்துக்கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.