ரூ.900 கோடி லாட்டரி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கியது ஏன்? உதயநிதி - ஆதவ் விவாதம்

Udhayanidhi Stalin DMK Lottery Tamil Nadu Legislative Assembly Aadhav Arjuna
By Karthikraja Aug 07, 2026 02:13 PM GMT
Report

லாட்டரி நிறுவனத்திடம் திமுக ரூ.900 கோடி நன்கொடை வாங்கியது குறித்து ஆதவ் அர்ஜுனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் விவாதம் செய்தனர்.

திமுகவினர் நடத்தும் சாராய ஆலை

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்றது.

இதில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் பேசும் போது, "நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள். மதுவில் வருமானம் பெருகுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். மதுவில் ஊழலை ஒழித்ததால்தான் வருமானம் கூடும் என்கிறோம்" என்று கூறினார். 

இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு, "போகிற போக்கில் ஊழல் என்கிறார். மேடையில் பேசுவதைப் போல இங்கே பேசக்கூடாது. ஆதாரத்தோடு பேசவேண்டும்" என்று கூறினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பி ஜெகத்ரட்சகனை சாராய ஆலையை நடத்தி டாஸ்மாக் மூலம் ஆர்டர் பெறுகின்றனர். திமுகவில் இருக்கும் பார்லிமென்ட் எம்பிக்கள் பலரும் சாராய ஆலை நடத்துகின்றனர்" என பேசினார்.

ரூ.900 கோடி நன்கொடை

அவர் பேசும் போது திமுக எம்எல்ஏ க்கள் லாட்டரி , லாட்டரி என குரல் எழுப்ப, லாட்டரி நிறுவனத்திடம் உங்கள் கட்சி ரூ.900 கோடி நன்கொடை பெற்றது ஏன்? தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள். நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லைஎன கேள்வி எழுப்பினார். 

ரூ.900 கோடி லாட்டரி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கியது ஏன்? உதயநிதி - ஆதவ் விவாதம் | Aadhav Arjuna Udhayanidhi Debat 900Cr Lottery Fund

அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்" என கூறினார். 

ரூ.900 கோடி லாட்டரி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கியது ஏன்? உதயநிதி - ஆதவ் விவாதம் | Aadhav Arjuna Udhayanidhi Debat 900Cr Lottery Fund

அதற்கு, "அது அவர் மற்றும் அவர் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். அது அவர் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு அது எதுவும் தெரியாது. அப்பாவை இங்கே காணும்; வீட்டிற்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள்" என்று பதிலளித்தார்.