விவசாயிகளின் பொற்கால ஆட்சி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Aadhav Arjuna
By Fathima Aug 10, 2026 09:10 AM GMT
Report

முதலில் 5 ஆண்டுகால ஆட்சியை 3 மாதத்துடன் ஒப்பிடலாமா? என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதத்தின் போது திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி சரியில்லை, கருப்பாக இருக்கிறது என மக்கள் கூறினார்கள்.

எங்கள் ஆட்சியில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, முதலில் 5 ஆண்டுகால ஆட்சியை 3 மாதத்துடன் ஒப்பிடலாமா? இந்த ஒப்பீடு நியாயமானதா?

எங்களது முதல்வர், விவசாயி என பதிவு செய்தார், விவசாயிகளுக்காக குரல் கொடுத்தார், விவசாய கடன் 5932 கோடியை தள்ளுபடி செய்துள்ளார், எங்கள் முதல்வர் சொன்னதை செய்வார்.

தற்போது நெல், கரும்புக்கான விலையை உயர்த்தினார், ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டுருப்போமா?

எங்கள் ஆட்சியில் ரேஷன் பொருட்கள் தரமானதாக வழங்கப்படும், விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக எங்கள் ஆட்சி இருக்கும் என தெரிவித்தார்.