தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

Tamil nadu Prime minister TN Assembly India Aadhav Arjuna
By Karthikraja Aug 12, 2026 01:46 PM GMT
Report

aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். 

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு | Aadhav Arjuna Says Need Pm From Tamilnadu

இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர்

இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை 50 சதவிகிதம் உயர்த்தினாலும் பாதிப்பு ஏற்படக்கூடும். 

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு | Aadhav Arjuna Says Need Pm From Tamilnadu

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தற்போது 5 முதல் 6 வட இந்திய மாநிலங்கள் சேர்ந்தாலே பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலை தற்போது வரை உள்ளது. அது மாற்றப்பட வேண்டும்.

தென் இந்தியாவிலிருந்து ஏன் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். அதிகாரம் உத்தரப்பிரதேசத்திற்கோ, பீகாருக்கோ, குஜராத்திற்கோ மட்டும் அல்ல. நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது போல், பாராளுமன்றத்தில் ஒரு பிரதமராக ஒலிக்கப்பட வேண்டும்" என பேசியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது குறித்து பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்யாததை எல்லாம் செய்ததாக கூறி இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு, பிற மொழிகளில் போலி செய்திகள் மூலம் மாயபிம்பம் உருவாக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு | Aadhav Arjuna Says Need Pm From Tamilnadu

இந்த மாயபிம்பத்தை வைத்து, 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது" என பேசியிருந்தார்.

  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.