திமுக அதிமுக கூட்டணி வைத்தால் கனிமொழி விடுத்த மிரட்டல் - ஆதவ் அர்ஜுனா பேச்சு

Smt M. K. Kanimozhi ADMK DMK Aadhav Arjuna
By Karthikraja May 15, 2026 10:30 AM GMT
Report

அதிமுக திமுக கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்துவிடுவேன் என கனிமொழி சொன்னதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா பேச்சு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க குதிரை பேரம் நடத்தியதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். 

திமுக அதிமுக கூட்டணி வைத்தால் கனிமொழி விடுத்த மிரட்டல் - ஆதவ் அர்ஜுனா பேச்சு | Aadhav Arjuna Says Kanimozhi Oppose Dmk With Admk

இந்நிலையில், வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகதான் குதிரை பேரம் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "தவெக குதிரைப்பேரம் நடத்தியதாகச் சொல்கிறார்கள். அதற்கு எங்கள் தலைவர் இது குதிரைபேர அரசு இல்லை. குதிரை வேகத்தில் செயல்படும் அரசு என விளக்கமளித்தார்.

அதிமுக திமுக கூட்டணி

ஆனால் உண்மையில் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மற்றும் ஒரு தொழிலதிபர் ஆகியோர் இணைந்துதான் அந்த வேலைகளைச் செய்தார்கள்.

அப்போது திடீரென உள்ளே வந்த கனிமொழி, 'இது என் அப்பா உருவாக்கிய கட்சி, இப்படி அதிமுகவுடன் கைகோர்த்தால் நான் இப்போதே பதவியை ராஜினாமா செய்வேன்' என எச்சரித்தார். கனிமொழியிடம் இருக்கும் அந்த கொள்கை அரசியல் உதயநிதியிடம் கிடையாது.

அதிமுகவுடன் சேர கலைஞரோடு பயணித்த அனைவரும் கடுமையாக எதிர்ப்பு. இந்த காலத்தில் நீங்கள் அதிமுகவுடன் சேரக்கூடாது, ஜனநாயகத்தை மதிப்போம் என சொன்னார்கள் திமுகவில் உள்ள ஒரு சில நல்லவர்கள்.

திமுக அதிமுக கூட்டணியமைத்து ஆட்சியமைக்க விரும்புவதை கம்யூனிஸ்ட் தலைவர் பேபியும் எதிர்த்துள்ளார்" என பேசினார்.