வைகோ திமுக தலைவராக இருந்திருந்தால்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
aadhav arjuna says if vaiko was dmk president: வைகோ திமுக தலைவராக இருந்திருந்தால் அரசியல் சூழலே மாறியிருக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
தாராபுரத்தில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் சொன்னதும் அந்த கட்சியின் 2 எம்எல்ஏக்கள் எங்கள் ஆட்சிக்கு ஆதரவு வழங்கினார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன் சொன்னதும் அந்த கட்சி எம்எல்ஏக்கள் எங்களுக்கு வழங்கினர். தற்போது அமைச்சர் ஆகி விட்டார்கள்.
ஆனால் வைகோ அண்ணனுடைய வருத்தம், வலி என்ன தெரியுமா?, முதலமைச்சரை பார்த்த ;போது சொன்னார். நாங்க செயற்குழுவை போட்டோம், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டோம்.
ஆனால் படுபாவி பசங்க, 30 வருசமா என் கூட இருந்தவங்க திருட்டு பசங்கனு எனக்கு தெரியல. எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள். 2 மதிமுக எம்எல்ஏக்களை எத்தனை கோடிக்கு வாங்குனீர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே.
வைகோ திமுகவின் தலைவராக இருந்திருந்தால்
முதலமைச்சரை பார்த்த போது வைகோ அண்ணன் சொன்னார் இது என்னுடைய கடைசி காலம், நல்லது செய்ய வேண்டுமென நினைக்கிறன் என கூறினார். யார் சொன்ன இது கடைசி காலம் என்று? இனி தான் உங்கள் அடுத்த வாழ்க்கை ஆரம்பிக்க போகிறது என முதல்வர் சொன்னார்.

வைகோ அண்ணன் 1990களில் என்ன கனவு கண்டரோ, தேர்தல் அரசியலில் திமுகவின் ஆதிக்கம் தூக்கி எறியப்படும். அண்ணா உருவாக்கிய கட்சி இருக்கட்டும். ஆனால், இந்த குடும்பத்தின் ஆதிக்கம் இருக்க கூடாது.
யாரோ ஒருத்தர் கீழே இருந்து வந்து திமுகவின் தலைவர் ஆகட்டுமே. வைகோ அண்ணன் கீழே இருந்து வந்தவர். இந்நேரம் வைகோ அண்ணன் திமுகவின் தலைவராக இருந்திருந்தால் அரசியல் சூழலே மாறியிருக்கும். அதை அன்னிக்கு ஒழிச்சு விட்டாங்க" என பேசினார்.
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு IBC Tamil