ஆதவ் மனைவியின் சொத்து மதிப்பே ரூ.245 கோடியா? வேட்புமனுவில் வெளிவந்த தகவல்

Election Net worth Aadhav Arjuna TVK
By Vinoja Apr 02, 2026 03:30 PM GMT
Report

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடந்துவருகின்றது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா, தனக்கு ரூ.197 கோடி சொத்து இருப்பதாகவும், அவரது மனைவி டெய்சியின் சொத்து மதிப்பு ரூ.245 கோடி எனவும் வேட்புமனுவில் சொத்து விபரங்களை சமர்பித்துள்ளார்.

ஆதவ் மனைவியின் சொத்து மதிப்பே ரூ.245 கோடியா? வேட்புமனுவில் வெளிவந்த தகவல் | Aadhav Arjuna Networth Details

வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடவுள்ள ஆதவ் அர்ஜூனா நேற்று முன்தினம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தானும் தனது மனைவி டெய்சியும் வணிகம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளதுடன் இருவரின் சொத்து பற்றிய விபரங்ளையும் சமர்பப்பித்துள்ளார்.

மேலும், தனது மனைவிக்கு சொத்துக்களில் இருந்தும் வருமானம் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சொத்து விபரம் 

ஆதவ் அர்ஜூனா தனது வருமான வரிக்கணக்கில் 2020-21ல் ரூ.5.89 கோடி, 2021-22ல் ரூ.66.73 லட்சம், 2022-23ல் ரூ.20.17 கோடி, 2023-24ல் ரூ.29.73, 2024-25ல் ரூ.11.10 கோடி வரி செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது மனைவி டெய்சியின் வருமான வரிக் கணக்கில் 2020-21ல் ரூ.1.52 கோடி, 2021-22ல் ரூ.3.67 கோடி, 2022-23ல் ரூ.5.38 கோடி, 2023-24ல் ரூ.21.24 கோடி, 2024-25ல் ரூ.6.85 கோடி செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜூனா தனது கையில் ரொக்கமாக ரூ.1.69 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆதவ் மனைவியின் சொத்து மதிப்பே ரூ.245 கோடியா? வேட்புமனுவில் வெளிவந்த தகவல் | Aadhav Arjuna Networth Details

ஆதவ் அர்ஜூனாவிடம் ரூ.9.95 லட்சம் மதிப்புள்ள இனோவா, ரூ.10.55 லட்சம் மதிப்புள்ள மாருதி என 2 கார்கள் உள்ளதாகவும் ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்ட் பைக், ரூ.63 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள் உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

வரப்பெறவேண்டிய தொகை, வட்டித்தொகை போன்ற ஏனைய சொத்துக்கள் என்ற வகையில் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொகை ரூ.17 லட்சம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜூனாவின் பெயரில் வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்தத் தொகை ரூ.17.53 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்காகத் தொடங்கப்பட்ட இந்திய ஓவர்சீஸ் சிஐடி நகர் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.51 ஆயிரம், ஆக்சிஸ் வங்கி எல்டாம்ஸ் சாலை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.1.95 கோடி, ஈக்விடாஸ் வங்கி பாரிமுனை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.37.83 கோடி, எச்எஸ்பிசி வங்கி சென்னை மெரினா கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.18.37 கோடி, கரூர் வைஸ்யா வங்கி ஒய்ட்ஸ் சாலை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.3.50 லட்சம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஆழ்வார்பேட்டை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.6.23 லட்சம், பஞ்சாப் நேட்னல் வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.10.73 லட்சம், எச்டிஎப்சி அண்ணா சாலை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.1.60 லட்சம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், எச்டிஎப்சி அண்ணா சாலை கிளையில் பிக்சட் டெபாசிட் ரூ.10 கோடி உள்ளது.

ஆதவ் மனைவியின் சொத்து மதிப்பே ரூ.245 கோடியா? வேட்புமனுவில் வெளிவந்த தகவல் | Aadhav Arjuna Networth Details

மேலும் ஆதவ் அர்ஜூனா நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்டவற்றில் செய்துள்ள முதலீடுகளின் மொத்தத் தொகை ரூ.2.23 கோடி. அரைஸ் கன்ஸ்ட்ரக்டன்ஸ் பி லிட் நிறுவனத்தில் ரூ.90 ஆயிரம், வாய்ஸ் ஆப் காமன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தில் ரூ.90 ஆயிரம், வாய்ஸ் ஆப் காமன் வியூகவகுப்பு நிறுவனத்தில் ரூ.9.99 லட்சம், அத்தலெடிக் கேம் ஸ்டேடர்ஜி அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.99 ஆயிரம், அரைஸ் இன்வெஸ்மென்ட் அண்ட் கன்சல்டன்ஸ் நிறுவனத்தில் ரூ.2.09 கோடி, வாய்ஸ் ஆப் காமன் அறக்கட்டையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜூனா பெயரில் உள்ள குடியிருப்புக் கட்டிடங்களின் மொத்த மதிப்பு: ரூ.17.49 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தண்டியில் 42995.6 சதுர அடி நிலத்தில் 13635.7 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.12.50 கோடி. போட் கிளப்பில் உள்ள 1094.5 சதுர அடி நிலத்தில் 2352 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தின் வாங்கியபோதிருந்த (வாங்கிய ஆண்டு 2021) மதிப்பு ரூ.4.50 கோடி, அந்தக் கட்டடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.4.99 கோடி.

ஆதவின் பிரமாண பத்திரத்தில், 2021ம் ஆண்டு ரூ.1.38 கோடி, 20223ம் ஆண்டு ரூ.50 லட்சம் செலுத்த வேண்டிய வருமான வரி தொடர்பான மேல்முறையீடு வருமான வரி ஆணையரிடம் விசாரணை நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஐ வழக்கு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கரூர் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை. மேலும், மரணம் விளைவிக்க முயற்சித்தல், தனிநபர் உயிருக்கோ சொத்துக்கோ ஆபத்து விளைவிக்கும் செயல், அரசுப் பணியாளரைத் தடுத்தல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்டவற்றின் கீழ் தன்மீது பதியப்பட்ட வழக்குகள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

மனைவி டெய்சியிடம் ரொக்கம் ரூ.12.22 கோடி , ரூ.7.50 லட்சம் மதிப்பு டிராக்டர் இருப்பதாககூறியுள்ளார். டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொகை ரூ.2.60 கோடி எனக் கூறப்பட்டுள்ளது.

டெய்சி பெயரில் வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் ரூ.12.49 கோடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெய்சி நிறுவனங்களின் பங்குகள், எல்எல்பி, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் 41 நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகளின் மொத்தத் தொகை: ரூ.68.75 கோடி இதில் பார்தி ஏர்டெலின் 125 பங்குகளில் ரூ.88 ஆயிரம், எச்.டி.எப்.சி வங்கியின் 123 பங்குகளில் ரூ.1.96 லட்சம், ரிபாட்ரியேட்ஸ் கோ-ஆப்பரேட்டிவ் பைனான்ஸ் மற்றும் டெவலப்மென்ட் பேங்க் லிட் 4000 பங்குகளில் ரூ.1 லட்சம், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிட் 1430 பங்குகளில் ரூ.1.56 லட்சம், ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கியில் 116250 பங்குகளில் ரூ.1.05 கோடி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் 2860 பங்குகளில் ரூ.31.93 லட்சம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 69 பங்குகளில் ரூ.2.19 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

எல்எல்பியில் செய்துள்ள முதலீடுகள்: குரூவி இன்ப்ராகாம் எல்எல்பி ரூ.29.94 லட்சம், மேக்னடிக் ரியல்கான் எல்எல்பி ரூ.4.99 லட்சம், சாகேதநாத் அண்ட் கோ ரூ.1.75 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மியூச்சுவல்பண்ட் மூலம் எஸ்.பி.ஐ ஆர்பிட்ரேஜ் ஆப்பர்சூனிட்டீஸ் பண்ட் ரூ.3.22 கோடி, எஸ்.பி.ஐ சேவிங்ஸ் பண்ட் - குரோத் ரூ.33.57 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.