தவெகவில் ஆதவ் அர்ஜூனாவிற்கு முக்கியப் பொறுப்பு; ஆனால்.. திருமாவை சந்தித்தது ஏன்?
ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறார். அதன்படி, மூன்றாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 19 மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டா. இந்நிலையில், விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்து கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அவருக்கு பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா திடீரென விசிக அலுவலகத்திற்கு வந்து திருமாவளவனைச் சந்தித்தார்.
திருமாவுடன் சந்திப்பு ஏன்?
இது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளானது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. தன்னிடம் வாழ்த்து பெறவே ஆதவ் அர்ஜுனா வந்தார். மாற்றுக் கட்சியில் இணைந்தாலும் வாழ்த்து பெற வந்து புதிய அரசியல் நாகரீகத்தை ஆதவ் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ரொம்ப அரசியல் பேச வேண்டாம். ஆதவ் அர்ஜுனா செய்துள்ளது தமிழ்நாடு அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைப்பதாக உள்ளது.
கருத்தியல் ரீதியாக முரண்கள் இருந்தாலும் களத்தில் நேர் எதிராகச் செயல்படும் சூழல் இருந்தாலும் கூட இத்தகைய நட்புறவைப் பேணுவது நாகரிகமான அணுகுமுறை. விஜய் உடன் இணைந்தாலும் பெரியார் அரசியலையே உயர்த்தி பிடிப்பேன் என்று குறிப்பிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.