விஜய் கட்சியில் இணையும் ஆதவ் அர்ஜுனா - என்ன பதவி?
தவெக தலைவர் விஜய்யை ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார்.
விஜய்
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
தற்போது கட்சிக்கான மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, அவர்களுடனான சந்திப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஆதவ் அர்ஜுனா
இந்நிலையில் இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூகம் வகுக்கக்கூடிய நிறுவன தலைவர் ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த ஆதவ் அர்ஜுனா, விஜய் வெளியிட்ட அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அந்த மேடையில் அவர் விஜய்யை ஆதரித்து பேசியதோடு, கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா விசிக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.
அரசியல் ஆலோசகர்
ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கப்பட்ட 2ஆம் ஆண்டு தினமான வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக திமுக போன்ற கட்சிகளுக்கு ஆதவ் அர்ஜுனா தேர்தல் பணியாற்றியுள்ள நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி முன்னெடுக்கப்படும் நகர்வுகள், பூத் கமிட்டி அமைத்தல் போன்ற களப் பணிகளை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்வது கட்சியை பலப்படுத்தும் என விஜய் நம்புகிறார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
