ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலருக்கு கால் முறிவு

Aadhav Arjuna
By Fathima Apr 02, 2026 10:47 AM GMT
Report

திருச்சியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் காவலரின் கால் முறிந்தது.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இன்று விஜய் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார், இவருடன் எஸ்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டனர்.

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலருக்கு கால் முறிவு | Aadhav Arjuna Car

பிரசாரம் நிறைவடைந்து, வாகனத்தில் புறப்பட்டனர், இவர்களை பின்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவின் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் மீது மோதியது, இதில் அவர் தடுமாறி கீழே விழுந்ததில் கார் ஏறி இறங்கியதாக தெரிகிறது, இதில் வலி தாங்க முடியாமல் அவர் கதறினார்.

உடனடியாக அவரை சக காவலர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அவரது பெயர் சதீஷ் என தெரியவந்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலருக்கு கால் முறிவு | Aadhav Arjuna Car