நடிகர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்; தனுஷை மறைமுகமாக சீண்டிய அமைச்சர் ஆதவ்

Dhanush Aadhav Arjuna
By Karthikraja Oct 24, 2026 11:00 AM GMT
Report

minister aadhav arjuna attack dhanush indirectly as actor in delhi: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அரசியல் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. 

நடிகர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்; தனுஷை மறைமுகமாக சீண்டிய அமைச்சர் ஆதவ் | Aadhav Arjuna Attack Actor Dhanush Indirectly

இந்நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நடிகர் தனுஷை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

தனுஷை மறைமுகமாக சீண்டிய அமைச்சர் ஆதவ்

சென்னை எழும்பூரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர். 

நடிகர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்; தனுஷை மறைமுகமாக சீண்டிய அமைச்சர் ஆதவ் | Aadhav Arjuna Attack Actor Dhanush Indirectly

இதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் வெற்றி தமிழ்நாட்டில் இருந்து உருவாகும். இந்தியாவின் வெற்றி மதசார்பற்ற கொள்கையின் வெற்றி.

இதை உடைக்க தான் புதிய புதிய நடிகர் டெல்லியில் போய் உக்கார்ந்து இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் நடக்காது. எல்லாத்தையும் பார்த்தாச்சு. யார் வேண்டுமானாலும் வரட்டும். எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும்.

திமுக கொஞ்சம் போர் அடித்து விட்டது, திமுக ஷைத்தானின் பிள்ளைகள் ஆகி விட்டார்கள். அடுத்து புதிது புதிதாக ஷைத்தானின் பிள்ளைகள் வருவார்கள், டெல்லியில் இருந்து.

எந்த நடிகர் டெல்லியில் போய் உக்கார்ந்து இருக்கிறார் என பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஏன் மக்களுக்கு தெரியாதா? இதனால் வர உள்ள தேர்தலில் பல்வேறு வேலைகளை செய்வார்கள். நாங்கள் பூத் லெவலில் மனதில் எல்லா வேலைகளையும் வச்சுட்டு இருக்கோம்" என தெரிவித்துள்ளார்.