விஜய் கட்சியில் இணைகிறேனா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தவெகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா
விசிகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி 6 மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு திமுகவின் அழுத்தமே காரணம் என பேசி வந்தார்.
தவெகவில் இணைவு
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்ட போது, கட்சியில் மீண்டும் சேரும் எண்ணம் இருந்தால் அவர் அமைதி காத்திருக்க வேண்டும். அவர் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை கூறி வருவதை பார்க்கும் பொது அவருக்கு வேறு செயல்திட்டம் உள்ளது போல் தெரிகிறது என கூறினார்.
இதனையடுத்து விசிகவிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். விசிகவிலிருந்து விலகியுள்ள நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில் விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "இணைப்பு என்பதை தாண்டி, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். எதிர்கால திட்டம் குறித்து விரைவில் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பேன்" என தெரிவித்தார்.