நீங்கள் ஆதார் கார்டு வாங்கி 10 வருடங்கள் ஆகிறதா? அச்சச்சோ அப்போ உடனே இதை செய்யுங்கள்

Government Of India
By Thahir Mar 16, 2023 03:57 AM GMT
Report

10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அட்டை பெற்று இதுவரையிலும் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதாரை இலவசமாக புதுப்பிக்கலாம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (( Unique Identification Authority of India (UIDAI) )) அடுத்து 3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணைய தளம் மூலம் இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஆதார் மையங்களுக்கு சென்று புதுப்பித்தால் வழக்கம் போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தற்போது இந்த சேவையை மார்ச் 15 முதல் ஜுன் 14, 2023 வரை இலவச சேவையாக கிடைக்க ஆணையம் முடிவெடுத்துள்ளது.

நீங்கள் ஆதார் கார்டு வாங்கி 10 வருடங்கள் ஆகிறதா? அச்சச்சோ அப்போ உடனே இதை செய்யுங்கள் | Aadhar Card Correction Free For 3 Month

இந்த சேவையை மை ஆதார் ‘my Aadhaar’ எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாக பெற முடியும். லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது.

பயனாளர்கள் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு சென்று தங்கள் ஆதார் தரவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.