இனி ஆதார் அவசியமில்லை; அரசின் புதிய ரூல் - எச்சரிக்கை
இனி உங்கள் ஆதாரின் போட்டோ காப்பி தேவைப்படாது.
ஆதார் அட்டை
குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க, ஹோட்டல்கள், நிகழ்ச்சி மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களிடம் ஆதார் அட்டையின் காகித நகல் பெறுவது விரைவில் நிறுத்தப்பட உள்ளது.

அதன்படி, யாருக்கும் ஆதார் புகைப்பட நகலை சேகரிக்கும் உரிமை கிடையாது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கே டிஜிட்டல் / QR verification செய்ய அனுமதி வழங்கப்படும். புதிய நடைமுறையில், சரிபார்ப்பு QR குறியீடு மற்றும் பாதுகாப்பான மொபைல் செயலி மூலம் நடைபெறும்.
புது ரூல்ஸ்
எந்த தகவலும் நிறுவனத்திடம் சேமிக்கப்படாது. மேலும், இணைய இணைப்பு இல்லாத சூழலிலும் verification செயல்படும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் தங்கள் முகவரிகளை புதுப்பிக்கவும், மொபைல் போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் சேர்க்க முடியும். மேலும், மத்திய சர்வர் இணைப்பு தேவையில்லாமல் ‘ஆப்-டு-ஆப்’ சரிபார்ப்புக்கான ஆப் சோதனை நிலையில் உள்ளது.
இது விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், கடைகள் போன்ற இடங்களில் எளிதாகப் பயன்படும். இது தரவு கசிவு அபாயத்தை குறைக்கவும், தனிநபர் தகவல் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும். இந்த புதிய விதிக்கு அதிகாரசபை ஒப்புதல் அளித்துள்ளது, விரைவில் அறிவிக்கப்படும்.