பால் பாக்கெட் வாங்க ஆதார் கார்டு, ரேசன் கார்டு கட்டாயம் - ஆவின் அதிரடி அறிவிப்பு

Government of Tamil Nadu
By Thahir Mar 03, 2023 11:13 AM GMT
Report

ஆவின் மாதாந்திர பால் அட்டை பெற ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண், ரேசன் கார்டு அவசியம் 

ஆதார் அட்டை நகல் கொடுக்கப்படவில்லை என்றால் ஆவின் பால் அட்டை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் மாதந்திர கட்டணம் செலுத்தி பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி ஆதார் எண் கட்டாயம் எனவும், ரேசன் கார்டு அட்டை நகல் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aadhaar card is mandatory to buy aavin milk

ஆவின் பாலுக்கு மாதந்திரம் கட்டணம் செலுத்தி அட்டை மூலம் பால் பாக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் பால் பாக்கெட் விற்பனை செய்து வருகிறது.

ஆவின் பால் அட்டை பெற்று பால் பெறும் வாடிக்கையாளர்கள் மார்ச் 23 மாதாந்திர பால் அட்டை பெற ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் வழங்கி பெற்றுக்கொள்ளவும்.

மேற்காணும் அடையாள அட்டை இல்லாமல் பால் அட்டை வழங்கப்படமாட்டாது என்று விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.