சென்னை மக்களே கவனமாக செல்லுங்கள்...பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு..!

Chennai Death
By Thahir Aug 11, 2023 05:21 AM GMT
Report

சென்னையில் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் 

சென்னை பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் மற்றும் மின்வாரியம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு உயரழுத்த கேபிள் இணைப்பு தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வழியாக ராமகுணா, மதிவாணன் என்ற இரண்டு இளைஞர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் இரவு பணிக்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது சாலையில் விளக்கு எரியாமல் இருட்டாக இருந்ததால் இரவு பணிக்கு சென்ற இளைஞர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினர்.

A youth who fell into a ditch died

ஒருவர் உயிரிழப்பு 

இதில் ராமகுணா கம்பிகள் குத்திய நிலையில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்ற மதிவாணன் படுகாயமடைந்தார்.

இதனைக் கண்ட அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மதிவாணனை மீட்டு பூவிருந்தமல்லி உள்ள அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.