மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு - காவு வாங்க காத்திருக்கும் மரண பள்ளங்கள்
சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள மழை நீர் தேங்காமல் இருக்க ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகரம் முழுவதும் இப்பணிகள் நடைபெறுவதால் பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் புதியதலைமுறை செய்தி தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முத்துகிருஷ்ணன்.
இவர் நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அலுவலகத்தில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.