கள்ளக்காதலியுடன் தொடர்பில் இருந்த நண்பன்....கொன்று புதைத்த இளைஞர் கைது

andhrapradesh friendmurder youthkilledbyfriend
By Petchi Avudaiappan Apr 07, 2022 04:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

தனது கள்ளக்காதலியுடன் தொடர்பில் இருந்த நண்பனை கொன்று இளைஞர் கொன்று புதைத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முதிமடுகு கிராமத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற இளைஞர் எலக்ட்ரீசியனாக இருந்து வருகிறார். இவரும் வி.கோட்டா பகுதியிலுள்ள நாராயண நகர் பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். 

இதனிடையே இஸ்மாயில் கடந்தாண்டு பெங்களூருக்கு சென்று உறவினர் வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். அதேசமயம் முதிமடுகு கிராமத்தை சேர்ந்த கணவரை பிரிந்த 2 குழந்தைகள் உள்ள இளம்பெண் ஒருவருக்கும், நரேசுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதை பெரிதும் எடுத்துக் கொள்ளாத நரேஷ் அந்தப்பெண்ணுடன் ஒரே வீட்டிலேயே தங்கியுள்ளார். மேலும் இஸ்மாயில் பெங்களூருவில் இருந்து வரும் போது வி.கோட்டாவில் அடிக்கடி நரேஷ் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் இஸ்மாயிலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. நரேஷ் இல்லாத நேரத்தில் வரும் இஸ்மாயில் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கேள்விப்பட்ட நரேஷ் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனாலும் தொடர்பை கைவிடாத இஸ்மாயிலை தீர்த்துக் கட்ட நரேஷ் முடிவு செய்துள்ளார். அடுத்த சில தினங்களில் இஸ்மாயில் மாயமாக அவரது பெற்றோர் வி.கோட்டா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இஸ்மாயிலின் செல்போனை வைத்தும் விசாரித்து வந்தனர். 

அதில் கடைசியாக அவர் நரேஷிடம் தான் பேசியது தெரிய வந்தது. இதனால் அவரை பிடித்து விசாரித்ததில் நரேஷ் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே விடாமல் விசாரணை நடத்தியதில் இஸ்மாயிலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

இஸ்மாயில் மீது கொலை வெறியில் இருந்த நரேஷ் தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை அவரிடம் திரும்ப தருமாறு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேட்டுள்ளார். மேலும் திட்டம் போட்டபடி கொலை நடந்த தினத்தன்று மாலை வி.கோட்டாவுக்கு வந்த இஸ்மாயில் நரேசுக்கு போன் செய்து வருமாறு கூறியுள்ளார். அன்றிரவு இருவரும் வி.கோட்டாவில் உள்ள ஏரிக்கு சென்று மது குடித்துள்ளனர். ஆனால் இஸ்மாயிலுக்கு அதிக மது ஊற்றி கொடுத்துள்ளார். 

அப்போது இஸ்மாயிலிடம் நரேஷ் தனது காதலியை விட்டு விடுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நரேஷ், மதுபாட்டிலை உடைத்து இஸ்மாயில் தலையில் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின் நரேஷ் அங்கேயே பள்ளம் தோண்டி இஸ்மாயில் சடலத்தை புதைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.