அண்ணனுடன் உறவு - கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியே வீசிய பெண்!
கழிவறையில் குழந்தை பெற்று பெண் ஒருவர் அதை ஜன்னல் வழியாக வெளியே வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்ப்பம்
மும்பை, நவிமும்பை உல்வே என்ற இடத்தில் அடுக்குமாடிக் கட்டடத்துக்கு கீழே, பிறந்து சில மணி நேரமேயான குழந்தை ஒன்று கிடந்தது. அதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்ததில் குழந்தை இறந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணையில் இரண்டாவது மாடியில் ஒரு வீட்டில் கழிவறை ஜன்னலில் கிரில் போடாமல் இருந்தது.

வீட்டில் இருந்தவர், வீட்டில் எனது சகோதரரின் 19 வயது மகளும் தங்கியுள்ளார். அவருக்கு வயிற்றுவலி வந்ததாகவும், உள்ளூர் கிளீனிக்குக்கு அழைத்துச் சென்று மருந்து வாங்கிக்கொடுத்தேன். அன்று இரவு திடீரென கழிவறைக்குச் சென்று வயிற்றுவலியால் அழுதார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடிக்கச் சென்றேன்.
அதிர்ச்சி
வந்து பார்க்கையில் தனக்கு வயிற்றுவலி சரியாகிவிட்டதாகவும் தெரிவித்தார் எனக் கூறியுள்ளார். அந்தப் பெண்ணிடன் விசாரிக்கையில், தன்னுடைய பெரியப்பா மகனுடன் உறவு வைத்துக்கொண்டதால் கர்ப்பமாகிவிட்டேன். அதோடு எட்டு மாதம் ஆன பிறகு வயிறு பெரியதாகத் தெரியாத காரணத்தால் இது குறித்து தனது குடும்பத்தினரிடமோ அல்லது தங்கியிருந்த தன்னுடைய பெரியப்பா வீட்டிலோ சொல்லவில்லை.
இரவு நேரத்தில் கழிவறையில் குழந்தை பிறந்ததால் அதை மறைக்க ஜன்னல் வழியாக அதை வெளியில் போட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு கைதுசெய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.