சாலையில் ஸ்கூட்டரில் சென்ற படி குளித்த இளைஞர் - மிரள விட்ட போலீசார்..!

Tamil nadu Viral Video Tamil Nadu Police Instagram
By Thahir May 29, 2023 02:55 PM GMT
Report

சாலை நடுவே குளித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டால் 10 ரூபாய் தருவதாக பாலோயர்ஸ் கூறியதை ஏற்று வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு ரூ.3,500 அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர் போலீசார்.

10 ரூபாய் சவாலுக்காக சாலை குளியல்   

ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டை சேர்ந்தவர் பார்த்திபன் (26). இவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் அளிக்கும் சவால்களை ஏற்று செயல்படுவது வழக்கம்,

அதன்படி, ஒருவர் நடுரோட்டில் குளித்தால் 10 ரூபாய் தருவதாக சவால் விட்டுள்ளார். அதை ஏற்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடுரோட்டில் குளித்து, சவாலுக்கான 10 ரூபாயை பெற்றதாகத் தெரிகிறது.

A young man who took a bath on a scooter

இந்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சமூக வலைதளங்களின் மீதான மோகம், லைக்ஸ் மற்றும் பாலோயர்ஸுக்கு ஆசைப்பட்டு ஆபத்தான, சட்ட விரோதமாக மற்றும் முகம் சுழிக்கும் வகையில் வீடியோக்களை பதிவு செய்கின்றனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் 

இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது, சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது என 3 பிரிவுகளின் கீழ், போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு ரூ.3500 அபராதமும் விதித்தனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்துள்ளனர்.