மன்மத மணமகன்...10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த தரமான சம்பவம்..!
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 பெண்களை திருமணம் செய்த இளைஞர்
கடந்த ஜுலை 31 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த லஸ்டின் இமானுவேல் என்ற 28 வயது இளைஞர் 10 பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இமானுவேல், இன்று நான் பத்து பெண்களை மணந்தேன்...அனைவரும் என் மனைவிகள் என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் 9 மணப்பெண்கள் மாப்பிள்ளையை சுற்றி நிற்பது இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு மணப்பெண் மாப்பிள்ளை மடியில் அமர்ந்து கொண்டு அவருக்கு முத்தம் கொடுக்கிறார்.
வைரலாகும் வீடியோ
சுற்றி நிற்கும் பெண்கள் கவர்ச்சியாக, குட்டையான? வெள்ளை ஆடைகளை அணிந்துள்ளனர். அவர்கள் கையில் பூங்கொத்து வைத்துள்ளனர்.
லஸ்டின் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். மேலும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் ஆவார். இவருக்கு டிக்டாக்கில் அதிக பாலோவர்கள் உள்ளனர்.
அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை 5,81,000 மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bro gonna lose his mind pic.twitter.com/aRSp01RTHp
— Lance?? (@Bornakang) August 1, 2023