துணிவு படத்தை பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் - அலறிய ஊழியர்கள்

Tamil nadu Tamil Nadu Police Dindigul
By Thahir 1 வாரம் முன்

திண்டுக்கல்லில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்றில் பட்டபகலில் உள்ளே நுழைந்த இளைஞர் ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதங்களுடன் நுழைந்த இளைஞர் 

திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு சாலையில் உள்ள ஆர் எம் காலனி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் வழக்கம் போல ஊழியர்கள் வங்கியை திறந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது காலை வங்கிக்குள் சென்ற பூச்சிநாயகன்பட்டியைச் சேர்ந்த கலீலுர்ரகுமான் என்ற இளைஞர் ஆயுதங்களை காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

A young man tried to rob a bank

பின்னர் வங்கி ஊழியர்கள் 3 பேரை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வங்கியில் இருந்த ஒரு ஊழியர் வெளியே வந்து கூச்சலிட்டு பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

பொதுமக்கள் உதவியுடன் கைது செய்த போலீசார்

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கலீலுர்ரகுமானை கைது செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திரைப்படத்தை பார்த்து விட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இளைஞர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.