போலந்து பெண்ணுக்கும் புதுக்கோட்டை பையனுக்கும் டும்..டும் - தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் !
போலந்து நாட்டை சேர்ந்த பெண்ணை புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
காதல் போலந்து நாடு
பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் புட் புதுக்கோட்டை மாவட்டம் பூசுத்துரையை சேர்ந்த அருண்பிரசாத் (32) என்ற இளைஞன் எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு பணிக்கு சேர்ந்த சிறிது காலத்தில் தனியாக கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார்.
இவர் போலந்து நாட்டில் பனி புரியும்போது அங்குள்ள அனியா (எ) அன்னா ரில்ஸ்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து இரு வீட்டர்களையும் அணுகியுள்ளனர்.
இதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இவர்களுக்கு போலந்து நாட்டு முறைப்படி நிச்சயம் நடைபெற்றது.
வெகு விமர்சையாக திருமணம்
இந்நிலையில், இவர்களது திருமணம் தமிழ் கலாச்சாரப்படி நடத்த முடிவெடுத்து இரு வீட்டார்கள், உறவினர்கள் முன்னிலையில் இன்று புதுக்கோட்டை புதுக்கோட்டை திருவப்பூர் அடுத்த அடப்பங்காராசத்திரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைவரும் அவர்களை மனமார வாழ்த்தி சென்றனர். போலந்து நாட்டு பெண்ணுக்கும் புதுக்கோண்ட்டை இளைஞனுக்கும் நடந்த இந்த திருமணம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.