காதலனை காண ரிஸ்க் எடுத்த பெண்- மாடியிலிருந்து தவறி விழுந்து பலி!

Tamil nadu Chennai
By Sumathi Jun 10, 2022 04:06 PM GMT
Report

சென்னையில் மாடியிலிருந்து புடவையை கயிறு போல் கட்டி கீழே இறங்கிய போது தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தார்.

 நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் மகிழ்மதி(25) சென்னை ஜாம்பஜார் கண்ணப்பன் தெருவில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்தார்.

காதலனை காண ரிஸ்க் எடுத்த பெண்- மாடியிலிருந்து தவறி விழுந்து பலி! | A Women Fell From The Floor And Died At Chennai

நேற்று இவரது ஆண் நண்பர் ராஜ்குமார் என்பவர் மகிழ்மதி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த மகிழ்மதி கதவை தட்டிய போது கதவு திறக்கப்படாததால் உடனே

தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ராஜ்குமார் செல்போனை எடுக்காததால் பதற்றமடைந்த மகிழ்மதி பால்கனி வழியாக பின்பக்க கதவை திறந்து உள்ளே செல்ல திட்டமிட்டு 3வது மாடியில் இருந்து புடவை மூலம் பால்கனிக்கு இறங்கினார்.

காதலனை காண ரிஸ்க் எடுத்த பெண்- மாடியிலிருந்து தவறி விழுந்து பலி! | A Women Fell From The Floor And Died At Chennai

அப்போது எதிர்பாராத விதமாக புடவை அறுந்ததில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மகிழ்மதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜ்குமார் அடையாறில் தங்கி பிரபல தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

மேலும் நேற்று மகிழ்மதி ஊருக்கு செல்வதால் தன்னை அழைத்து செல்ல வேண்டும் என கேட்டதாகவும், அதற்காக மகிழ்மதி வீட்டிற்கு வந்ததாகவும், பின்னர் அசதியில் கதவை தாழ்பாள்போட்டு விட்டு தூங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் மகிழ்மதி கதவு தட்டியது கேட்காததால் கதவை திறக்கவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.