ஈரோடு இடைத்தேர்தல்; ஓட்டு போடுவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்த பெண்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லுக்கான் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
இந்த நிலையில் இன்று பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தி ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
மேலும் இதே போல நாகலாந்து மற்றும் மேகலயாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வாக்களிக்க வந்த பெண்
இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் இன்று நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
அதே போல தற்போது நடக்கும் இடைத்தேர்தலிலும் வாக்கு செலுத்த வந்ததாகவும் தெரிவித்தார். ஓட்டு போடுவதற்காக 1300 அமெரிக்கா டாலர் அதாவது இந்தியா ரூபாய் மதிப்பில் 99498 ரூபாய் செலவு செய்து வந்துள்ளதாகவும் அவர் பேசினார்.
மேலும் அவர், எனது வாக்காளர் அட்டையில் தனது முகம் சரியாகயில்லை எனக் கூறி தன்னுடைய மற்ற பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்த பின்னர் தான் சிரமப்பட்டு வாக்களித்ததாகவும் வேதனை தெரிவித்தார்.