நடிகர் அஜித் வீட்டின் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் அஜித் வீட்டின் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பர்சானா என்ற பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில், தான் இறந்தால் அதற்கு அஜித் தான் காரணம் என கத்தியப்படியே சென்றார்.
கடந்தாண்டு மே மாதம் 23 ஆம் தேதி பிரபல மருத்துவமனையான அப்போலோவுக்கு சிகிச்சைக்காக நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். அவரை அங்கு உதவியாளராக பணியாற்றிய பர்ஷானா ஆர்வ மிகுதியால் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட அது வைரலானது. இதுதொடர்பாக பர்ஷானாவை அப்போலோ நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பர்ஷானா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து பர்ஸானாவின் நிலைமை அறிந்த ஷாலினி மருத்துவமனைக்கு ஃபோன் செய்து அவரை மன்னித்து மீண்டும் வேலை வழங்குங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், பர்ஸானாவை பணியில் அமர்த்தியது. ஆனால் மீண்டும் எந்த வேலையும் வழங்காமல் மருத்துவமனை அவரை பணி நீக்கம் செய்துவிட்டதாகவும், கல்வி சான்றிதழைகளை தர மறுப்பதாகவும் பர்ஸானா தற்போது குற்றசாட்டை வைத்து வருகிறார்.
மேலும் பர்ஷானா மீண்டும் தனக்கு பணி கிடைக்க வாய்ப்பளிக்குமாறு நடிகர் அஜித்தை கோரிக்கை வைக்க முடிவு செய்தார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அவரை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் பர்சானா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடிகர் அஜித்ததை பார்க்காமல் இங்கு இருந்து செல்ல மாட்டேன். நான் சாக முடிவெடுத்ததற்கு அவர் காரணம் என்று பர்சானா கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.